பக்கங்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2017

காலம் மாறியது காட்சி மாறவில்லை


காலம் மாறியது
காட்சி மாறவில்லை
வீட்டை விட்டு
பெண்கள் வெளியில்
வந்தனர்
கொடுமைகள் வீதியை
தாண்டி தொடர்ந்தது

பட்டங்கள் பெற்று
சட்டங்கள் செய்தனர்
கொடுமைகள் சாட்சி
சொல்ல வந்தது

தேவதாசி ஒழிந்தது
கொடுமைகள்
திரைத்துறை வரை
வந்தது

பணிக்கு வந்தனர்
நல்ல
பதவியும் கிடைத்தது
கூடவே
பாலியல் தொந்தரவுக்கு
எதிரான விதிகளும்
வந்தது


திருமண ஆன
பெண்ணுடன்
கூடவே வந்தது
வரதட்சணை தடுப்பு
சட்டம்

வீட்டில் உள்ள
பெண்ணுக்கும்
குடும்ப வன்முறை
சட்டம்

குழந்தைக்கு கொடுமைக்கு






இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

சுவாசிக்க கொடுக்க காற்று இல்லை என் பிஞ்சுகளுக்கு, 

பயிறுக்கும் உயிருக்கும் 
நீரில்லை 
வளர்க்க

வறட்சிக்கும்
விவசாயி
வாழ்வுக்கும் 
மானியமில்லை 
மனமில்லை
கொடுக்க 

கோமணத்தையும்
கழட்டிவிட்டு
உயிருக்கான
போராட்டத்தையும்
அவமதிக்கும்
ஆட்சி

சோறு போடும்
பூமியை
தோண்டி பார்க்க
அரசுக்கு
பேராசை

பொன்னிருக்காம்
எண்ணயிருக்காம்
சோறு வேண்டாமாம்

கல்லிருக்காம்
மண்ணிருக்காம் 
ஆறு 
குளமெல்லாம்
தண்ணியல்ல

இறைச்சி சாப்பிட்டா
நீ
இந்தியனல்ல
தேசதுரோகி

அம்பேத்கரை
மார்க்சை
பேசினால்
பாயும்
124 இதச
தடுப்பு காவல்

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 
மக்களே
மகிழ்ச்சியாய்
கொண்டாடுங்கள்

மண்ணினைத்த வானம்

கோடை முடிஞ்சும் 
அனல் கொஞ்சமும் 
குறையாத நேரம் 
மாலை வேளைக்கூட 
வெப்பம் தகிக்கும் 
பொது 

சில்லுனு சிலுத்து சின்ன காற்று ஒன்று 
தோன்றி 
மெல்ல பின் மாறி 
ஒரு சீற்றமாய் 
ஓடி பின் 
சட்டென்று 
குளிரெடுத்து 
வீசுது 
மழைக்காத்து 

அந்த 
குளிருக்கு 
சிலிர்க்கும் 
முன் 
சின்ன சின்ன 
முகிலுடைத்து 

சாரல் மழை 
சற்று நேரம் வீசி 
திசையெங்கும் தூவி 

பெருமழையாய் 
கொட்டி தீர்க்கும் 
பேரழகை 
எட்டிப்பார்க்கும் 
என்னுள் 
சின்ன நம்பிக்கை 

இந்த ஆண்டு 
நீர் நிலைகள் நிறையும் 
நிலத்தடி நீராதாரம் உயரும் 

குடிநீருக்கு 
நீண்ட தூரம் 
எம் மக்கள் 
அலைய வேண்டாம் 

கோடி கோடி 
நன்றிகள் 
மண்ணினைத்த 
மழைக்கு 

பேரறிவாளன்

pika: சின்னஞ்சிறு பருவம் 
கடந்த
இளைஞன் 
நீ அப்போது 
தான் --- 
இளமை உன் வாழ்வில் 
எட்டிப்பார்க்க
எத்தனிக்கும்
போது
பருவம் மாறி 
இந்த
உலகம் 
புரியும் முன் 
காரிருள் 
ஒன்று
உன்னை
சூழ்ந்து
இளமைக்காலத்தை
இருண்டக்காலமாய்
மாற்றியது
உனக்கு மட்டுமல்ல
இந்த
இனத்திற்கு 
வந்த
ஊழ்வினையோ

உன்னை சுற்றியும் அடர்ந்த இருள் 
உரக்க நீ கத்தியும் 
கேட்காத குரல்
கண்கள் சுழற்றினால்
கருமை நிறம் 
தாண்டி ஒன்றும் 
தெரியவில்லை 
கைகள் இரண்டும் 
திசையெங்கும் 
சுழற்றி சுழற்றி
காற்றை தவிர 
ஒன்றும் 
தட்டுபடவில்லை 
காலத்தை தவிர 
கண்களுக்கு 
ஒன்றும்
புலப்படவில்லை 
காலமும்
அது
எப்போதும்
இதுதாண்
இறந்த காலமா
அல்ல
எதிர்காலமா
புரியாத புதிராக
இருக்கும்
நிகழ்காலம்

பல ஒளியாண்டுகள் 
கடந்த
அயாசை
சோர்ந்து 
விழுந்து
கிடந்த 
நிலை 

காரிருள் காட்டுக்கோட்டை
யில்
கடும் வெப்பம் தரும் வேனிற்காலம் 
நிலெம்மல்லாம வெள்ளமாய்
நிரம்பிய 
மழைக்காலம்
பனி உறைந்த 
குளிர்காலம்

இன்னும் பல 
பல இயற்கை மாற்றம் 
எல்லாம் ஒன்றாய்
இருந்திருக்கும் 
உனக்கு 
ஆம் 
அந்த 
இருள்
கடந்து 
ஒளி ஊடுருவும் 
வரை 
உன் உடல்
உயிர்
மண்டலம்
காணும் 
வரை 

அதோ சிறு
துளை ஒன்று 
முளைத்திருக்கிறது 
நீண்ட 
கால 
அழுத்தமா
இறையின் 
அருளா
காலத்தின்
கட்டாயமா
கருணையா

அடர்ந்த இருட்டுக்குள்
ஊடுருவும் 
வெளிச்சக்கீற்று 
உன்
மூச்சுக்குழாய் 
உயிர்வளியை
முழுமையாய் 
சுவாசிக்கும் 
தருணமிது

இது ஒரு மாபெரும் தேர்த்திருவிழாவுக்கான 
ஒத்திகை
அல்ல

ஒரு
மனிதன் 
இழந்த
இளமை
பெருமை
சம உரிமை
ஒரு 
எளிய
வாழ்க்கை 

மீளப்பெறும் 
அற்பத
அறிவு

இது
ஒரு
பேரறிவாளன் 
தாய்க்கு 
எளிய
மகனாய்
மீண்டு
வரும் 
அற்புதம்

ponamasa kavalai

சுவாசிக்க கொடுக்க
காற்று இல்லை என்
பிஞ்சுகளுக்கு

வளர்த்தெடுக்க
நீரில்லை எங்கள்
பயிர்களுக்கு

--

கடந்த
திங்களிறுதியில்
வந்த கவலை

வரும் திங்கள்
முதல் வாரம்
வாடகை
அப்புறம்
அரிசி பருப்பு
மளிகை செலவு

அடுத்த வாரங்களில்
தொலைபேசி
தொலைக்காட்சி
பால், காய்கறி
பள்ளி மற்றும்
பிற கட்டணம்

இன்னும்
மருத்துவம்
கடன்
வட்டி
சீட்டு என
பல சிலவு

வாரம் வாரம்
பிரித்து
கொடுத்து

நிம்மதி
பெருமூச்சு
விடும்
நேரம்

சமையல்
எரிவாயு
தீர்ந்து
நிற்கும்

இல்லை
மாறாக
வண்டி காப்பீடு
முடிந்திருக்கும்

அதுவும்
இல்லையா
விடாது
கருப்பு
கதைபோல

பொறுப்பாய்
வந்திருக்கும்
அழைப்பிதழ்கள்

இவ்வளவு
பஞ்சாயத்திலும்
மனம் அசராமல்
சில
வீண் செலவு

ஒரு வழியாய்
அந்த திங்கள்
கடைசி
வந்து சேர

இன்னும்
தீரவில்லை
போன மாச
கவலை

................


இனிய காலை வணக்கம்

அதிகாலை இதமான 
குளிரை காண 
சன்னலை திறங்கள் 

பரிதி தன கதிரின் 
வெப்பத்தை 
குறைத்துள்ளான் 

பனிக்காற்று வீசுகிறது 
இதமாய் 

பக்தி பாட்டு 
கேட்கிறது 

பறவைகள் 
அங்கோன்றும்
இன்கொன்றுமாய் 
அலைகிறது 


இதமாய் இருக்கிறது 
காலை பொழுது 

இனிய காலை வணக்கம்