உழைக்கும் மக்கள்
நாங்கள் என்பது
ஊரறிந்த செய்தி
உரிமை ஏதும்
இங்கு இல்லை
என்பது தான் நீதி
உழைப்பில்
உடலைமட்டும்
வளர்த்துவிட்டு
உயிரை விட்டு விட்டோம்
தேசத்தின் பாதுகாப்புக்கு
கந்தகத்தில் கைவைக்கிறோம்
தலைவர்களோ
கண்டு கொள்வதில்லை
எங்கள் துயரங்களை
உங்கள் மகிழ்ச்சிக்கு
மத்தாப்புடன் கதைபேசுகிறோம்
மக்களோ
கிஞ்சித்தும் நினைப்பதில்லை
எங்கள்
எங்கள் பிஞ்சுகளும்
இங்கு வெந்து சாம்பலாகுது
கந்தக அமிலத்தில்
வயது வளர
தோலும், சதையும்
மெல்ல உருகி குலையுது
அவசரமாய் அடுக்குகிறார்
அவலங்களை அரசின் மீது
சட்ட மன்ற உறுப்பினர்
இப்போது
இனி இவர்
எங்கள் துயரை
துடைப்பது எப்போது
பல உயிரை இழந்த பிறகு
பேசுகிறார்
செத்து போன வசனம்
வருமுன் காக்க
வரவில்லையே இவர்
தருவாரா காரணம்
கண் கேட்ட பின்
ஏன்
கதிரவன் தரிசனம்
ஆம்
கேட்டு போனது
இவருக்கு இல்லையே
உழைக்கும் மக்கள்
நாங்கள் என்பது
ஊரறிந்த செய்தி
உரிமை ஏதும்
இங்கு இல்லை
என்பது தான் நீதி
.... பூங்குழலி