பக்கங்கள்

வியாழன், 13 டிசம்பர், 2012

முட்டாள் மேதாவி



 

 இவன்
சொல்வதெல்லாம்
சரி சரி
முற்றிலும்
சரி

அதை
தவறென்று
நீ
சொன்னால்

தவறு தவறு
முழுக்க
தவறு

அது
தவறென்பது
முற்றிலும்
சரி

ஆனால்
அதை
தவறென்று
நீ
சொல்வது
தவறு

ஆம்

நீ
சொன்னாலும்
தவறும
சரியாகாது

ஆம்
சொல்லும் இடத்தில
இருக்கிறான் அவன்

சொல்வதை
கேட்கும் இடம் தேடி
நீ  செல்லும்வரை

இவன்
சொல்லும்
தவறெல்லாம்
சரி சரி
முற்றிலும்
சரி

புரிகிறதா
இவன்
ஒரு
முட்டாள் மேதாவி
என்று

எங்கே
நீ
இப்போது
மெல்ல
சிரி

இதுவும் கடந்து
போகும் 


                                                                            .. பூங்குழலி

வாழும் தலைமுறை


 பருவத்தில் காமத்திற்கு 
காதல் என்று பெயரிட்டு 
செல்போனில் ஆரம்பித்து, 
பேஸ்புக்கில் உரையாடி 
ஸ்கைப் பில் படம் தேடுகிறாய் 
இருட்டு அறையில் 
எதிர்ப் பால் அறிய துடிகிறாய்

காதல் என்பது 
16 யில் ஆரம்பித்து 
20யில் சலித்து 
போவதல்ல 
இளமையில் தெரிந்து 
பருவத்தில் துளிர்த்து 
பின் 
வயது வளர்ந்து 
தளராமல்  நிற்கும் 
இளமை ஆயுதம் 

கல்வியை கூட 
அறிவுக்கான ஆயுதமாக 
பார்க்கவில்லை 
பணிக்கான கடவு சீட்டாய் 
கொண்டு சென்றாய் 

கற்றதை பரப்ப வேண்டும் 
கல்லாதோர் இல்லாத 
சமுதாயம் காண 
வேண்டும் 
என்று நினைக்க வில்லை 

இயற்க்கை ரசிக்க 
மட்டும் 
நினைத்து விட்டாய் 
போற்றி பாதுகாக்கும் 
கடமை ஒன்று 
உண்டென்பதை 
மறந்து விட்டாய் 

இதற்கெல்லாம் மேலாய் 
தமிழ்  இனத்தின் 
அடையாளத்தை 
சாதி என்னும் சகதியில்  
போட்டு புதைத்து விட்டாய்