பக்கங்கள்

புதன், 16 செப்டம்பர், 2015

வஞ்சம் தீர்த்த நட்பு

                          வஞ்சம் தீர்த்த நட்பு 
Image result for two girl friends in fight

வீழ்ந்தபோதேல்லாம் 
எழுந்தேன் -- 
உன்னிடம் ஆறுதல் தேட 

வாடிய போதெல்லாம் 
தேடினேன் உன்னை  
மீண்ட  கதை சொல்ல 

தூக்கி வீசப்பட்ட போதெல்லாம் 
சிறகுகள் விரித்தேன் 
அகன்ற வானம் தாண்டி 
அண்டம் அளந்த வித்தையை 
உன்னிடம் மட்டும் சொல்ல
மீண்டும் கீழே வந்தேன் 

என் ரகசியங்களை உன்னிடம் 
சொன்னேன் -- 
லவேட்சு சொன்னதை போல் 
ஆம் அதனால் தானோ என்னவோ 
உன்னிடம் மட்டும் என் நிம்மதியை 
இழந்தேன் 

தோழனோடும் ஏழமை பேசேல் 
என்கிறாள் பெருமாட்டி 

படித்தேனே, அவள் சொல் கேட்டேனா 

ஆம், இன்று தருணம் பார்த்தோ 
என்னவோ
என்னை சிறுமை செய்து 
நீ  பெரியவள் ஆனாய் 

 நல்லவள் தான் நீ 
ஆனால் நிருபிக்க 
எடுக்கும் முயற்சியில் 
சின்னவள் ஆனாயே  

முகம் மலர செய்தல் நட்பன்று 
உளம் குளிர செய்தாலே நட்பென்றான் 
பெருமான் 

ஆனால் நீ யோ 
இன்று 
என் அகம் வாட 
நிம்மதி  குழைய 
எப்போதும்  
சிரித்த முகம் 
சோகத்தை  சொந்தமாக்கி  
போனாய் 

இன்று நீ பேசியது 
பேச்சல்ல -- நஞ்சு 
கக்கியது வன்மைமல்ல 
வார்த்தை என்னும் வன்முறையில் 
வடித்த புண்கள் 

இதற்கு மருந்து போடா மாட்டேன் 
போட்டால் 
மதிகேட்டவல் நான் 
இன்னுமொரு நட்பை நாடுவேனோ 


எதற்கு வஞ்சம் தீர்தாயோ 
தெரியாது என் முன்னால் தோழியே 
நீ  வடகிருந்தாலும் வருவேனே ஒழிய 
வாழும்போது ஒருபோதும் உன்னை 
ஏறெடுத்து பாரேன்