இவள் புன்னகைஒளியில்
வீசிடும் வெளிச்சம்
தெறிக்கிறது
அந்த அறை முழுதும்
எட்டிவைக்கும்
ஒய்யார அடி
ஒவ்வொன்றும்
நாட்டியமாய் ஆடி
நளினமாய் ஓடி
எதிர்பாரமால் கவிழ்ந்து
விழுந்து
அழுது புருளும்
பின் மறந்து எழுவாள்
இவள்
பேசவந்து பேசுவது
போல் தெரிந்தாலும்
குரலின் இன்னிசை
புரியும்
விளக்கம் புரியாமல்
நாங்கள் முழித்தால்
எதோ புரிந்தது போல்
அவளிடும் சத்தம்
கடலோசை கடந்து
காதில் விழும்
அந்த மழலை மொழியில்
லயித்தாலும்
தெய்வ ஒலியோ
தேவார திருவாசகமோ
எதுவென்று
தெரியாமல் ரசித்திடுவோம்
ஒய்யார நடை நடந்து
ஓயாமல் ஓடிவந்து
ஒளிந்து ஒளிந்து
விளையாடி
இவள் அடிக்கும்
கூத்து
பார்த்து பார்த்து
பிடித்தது
எங்களுக்கு
பித்து
இவள் மழலை மொழியையும்
குழந்தை உலகமும்
எங்களுக்கு
நோய் தீர்க்கும் மருந்து
சேராது வந்து சேர்ந்த
செல்வம்