பக்கங்கள்

வியாழன், 29 நவம்பர், 2012

(நிறுவன) சமூக அக்கறை






இரண்டு வயது
குழந்தையை '
பார்த்துக்கொள்ள
ஒன்பது வயது
வேலைகாரி
கிடைத்துவிட்டாள்
இனி
நிறுவனதுக்கு
நிமமதியா ய்
செல்வேன்

CSR -- CORPORATE SOCIAL RESPONSIBILITY

got a
9 yrs old maid  to see my
1 years old babe --
can focus on my corporate profession



டெல்லியில்
நான் கண்ட
சமுக
அக்கறை

அதிகம் படித்த
பெண்ணொருத்தி
ஷாப்பிங் மாலில்
சுற்றிகொன்றிந்தால்
கூடவே

கைக்குழந்தையை
சுமந்துகொண்டு
ஒன்பது வயது
பெண்குழந்தை
வேலைகரியாய்

செவ்வாய், 27 நவம்பர், 2012

ஒடுக்கப்பட்ட தீ


பெண்ணுக்கு ஆண்
என்பது இயற்க்கை விதி
தலித்தும் வன்னியனும்
கூட இதில்  இலக்கு

காதலுக்கும் களவியலுக்கும்
சாதி கிடையாது
மதம் தெரியாது
அட கண்ணும் கூட கிடையாதாம்,
தெரியாதா  இது மருத்துவரே
உங்களுக்கு

வன்னியனுக்கும் தலித்துக்கும்
மரபணு விதியும்
நிருவுறுவும்
வேறு வேறு அல்ல

ஐயா என்ன
உயிரியல் தெரியாமல்
மருத்துவம் கற்றீர்களோ
அல்லது
கற்றது
சாதி மயக்கத்தில்
காடு வெட்டிகளின்
குரலுக்கு மட்டுபடுகிறதா

தாழ்த்தப்பட்ட ஆண்கள்
உயர்குலத்து பெண்களை
கவரும் வகையில்
நடக்க கூடாது

இது என்ன விதிவிலக்கற்ற
விதியா --
இல்லை யோசிக்காமல் கூறும்
சதியா

நீங்கள் பரப்பி வரும்
சாதி எனும் தீ

ஒடுக்கப்பட்ட மக்களின்
பொருளாதரத்தையும்
வாழ்வாதாரத்தையும்
சிதைத்து
சாம்பலாக்கியது


நீ
சமுக நீதியை பரப்ப வேண்டாம்
ஆனால்
சாதி தீயை பரப்ப வேண்டாம்


ஒடுக்கப்பட்ட தீட்டை தீண்டும்
அந்தத்தீ
இட்டவர் பக்கம் திரும்ப
காற்றும் ஒன்று வீச
காலம் அன்று வரும்
அந்த தீவிரவாத தீக்கு
பழியும் தெரியாது
பாவமும் புரியாது

அறிவற்ற ஆன்மாக்களை
அது -- அழித்துவிடும
பகுத்தறிவொன்றை
சொல்லிசெல்லும்
புற்றிட்ட சாதிக்கு
சடங்கு செய்து
புத்தம் புது
சமுகம்
ஒன்றை விட்டு செல்லும்

அந்த
புனற்பட்ட சமுகத்துக்கு
உன் வல்லமையை மீறி
நீயும்  கூட
ஒரு
முன்னோர் ஆனாய்
                                                                           . ... பூங்குழலி