
மக்களை பெற்ற மகராசி
இவ
ஆமாஞ்சாமி
திசைகொரு
குறியாய்
எட்டு
மக்களை பெற்ற மகராசி
இந்த
சிறுக்கியின்
தாய்மையை
ஊருக்கு
சொன்ன
என் மூத்த
சாமி
பெத்தத்திலே
கிழக்கு திசை
மேற்கே போய் சாதிச்ச விசை
எங்கய்யனும்
பேணிவளர்த்த விடிவெள்ளி
என் தலைக்கு
அதுவைக்கும் கொள்ளி
என்றிருந்த நேரம்
அள்ளி போட்டெனைய்ய வாய்க்கரிசி
அய்யோ அரற்றி கத்தக்கூட
தெம்பில்ல
எம்பது வயதாச்சி இந்த தாய்க்கு
நான்மூச்சிரைத்து
மூச்ச கொடுத்த
மூத்தப்பிள்ளை
இப்ப அந்த உசுரு
காத்துல எப்படி
காணாமற் போயிரிச்சி
பெயர் ஊர் தெரிய நோய்க்கு
வாயில்லா சீவனுக்கு வைத்தியம் படிச்சவன
என் குடும்ப கிழக்கு திசையை
நான் வைத்த வாழையடி
வாழையை
தூக்கி கொடுத்தேனோ
என் கிழக்க சுத்தி
திசையறிய
ஏழு திசையும்
ஏக்கத்தில்
கண் விழிக்க
தொலச்ச எங்க குடும்ப கிழக்க
அழுது அரற்றி தேடுது
பரம்பர விளங்க வந்த அவன் மக்க
அந்த ஓலம்
உயிரை கிழித்து தாண்டி
உள்ள போகுது
என் தலைச்சன
எப்படி தொலைசசெனோ
தெய்வமே
ஈ கடிக்கா எறும்பு கடிக்கா
கண்ணிமைக்க கையசைக்க
நோய் வராம நொடி வராம
நான் வளர்த்த எம் புள்ள
இப்ப வாரி கொடுத்து
வயிற்றில் எரியுது நெருப்பு
இனி நான்
கிழக்க சூரியன
பார்க்கும் பொது
மேற்கே அவன்
கரையம் பொது
உன் பெருமையா
நினைப்பேனோ
சொல்வேனோ
என் கண்ணே
.... இப்படிக்கு வானமாய் வாழ்ந்த்த தாய்