பக்கங்கள்

புதன், 27 மார்ச், 2013

சின்ன தீப்பொறி


 

 சின்ன தீப்பொறி ஒன்னு
சின்ன தீப்பொறி ஒன்னு 
கண்ணுக்கு தெரியாம 
கண்ணுக்கு தெரியாம 
இருந்தது இருந்தது
எங்க நெஞ்சுக்குள்ள
தமிழர் தம் நெஞ்சுக்குள்ள
பல காலமா

சின்ன சிறுத்தை கூட்டம் -- எங்க
சின்ன சிறுத்தை கூட்டம்
குச்சியில்லாமல் வத்தியில்லாமல்
 குச்சியில்லாமல் வத்தியில்லாமல்
கனல்  மூச்சிலேயே  --ஒரு
எரிமலை கட்டினாங்க 
சில காலமா 

இப்ப  எரிமலையது  
எரியுது பத்தி எரியுது 
எங்க நெஞ்சும் வயிறும்-- எரிகடல போல 
பொறுமி வழியுது -- அனல்பரிதியாய்

வெந்து குலயுது 


காலமா பல காலமா 
நாங்க சேது வெச்ச
அடிவயித்து நெருப்பு --இப்ப
ஆழி நெருப்பாய்
அதிர்ந்து கிளம்புது 
எங்க சின்ன கதிருங்க
ஊதி கிளப்புது

உண்ணாம கொள்ளம்மா 
உசுரு கொலஞ்சு 
நோன்பு இருக்குது 
எங்க எதிர்கால நம்பிக்கை
எங்க கண்ணு முன்னால
மன கண்ணு முன்னாலே
தெரியுது
இனத்துக்கு விடிவெள்ளி
ஈழத்துக்கு வரும் வழி
தமிழீழம் வரும் வழி
ஐயோ
இனத்து பேரச்சொல்லி 
இத்தன காலமா ஏமாதும் கூடடம் 
ஆசை நாக்கு தொங்க
நீலி ஒநாயா சுத்தி வருது
வோட்டுவேட்டைக்கு 
சின்ன புள்ளைகள  சுத்தி வருகுது
சிறுத்தைகளை  சுத்தி வருது


சின்னஞ்சிருசுங்க போட்ட வேட்டுக்கு
சிம்மாசனத்த தூக்கி போட்டு
பழம் பெருச்சாளிகளும் பாடம் படிக்குது
மானங்கெட்டு வெக்கி தல குனிய

புத்தியால தெளிஞ்ச புள்ளைங்க
இதுகளுக்கு புத்திமதி சொல்ல
எங்களுக்கு தகுதி இல்லை
ஆனா ஒன்னும் மட்டும்
சொல்லுதேன் என் செல்லங்களே
நீங்க சேத்த எரிமலையில் எரிவது
நம் இனமானம் -- இனி வேண்டாம்
நமக்கு அவமானம்

ஆனா உணர்வு மிகுந்து
வச்சுக்கதீங்க
என் புள்ளைகள தலைக்கு கொள்ளி
உங்க தலைய நம்பி
தானே இருக்கோம் சாமி -

இன விடுதலைக்கு ஒரு வழி தேடி

மாளாது ஒரு உயிரும் --
சூளுரையுங்கள்
ஆதி சாதியை
அழியாமல் காக்க
பேரழியாய்  இருப்போமென

                                                               .... பூங்குழலி

செவ்வாய், 26 மார்ச், 2013

கையளவு காமம்












மெல்ல மெல்ல
மேனித் தீண்டும்   -- உன்

ஆசையாடும்  சரசம்


சொல்ல சொல்ல
எல்லைதாண்டும் -- உன்
 ஆண்மையாடும் சல்லாபம்           -- (மெல்ல)

 எதோ எனக்குள்  சொல்லாமல்
சொல்லி சொல்லி
ஏனோ தூண்டி போட்டேதென்ன -- நீ
உன் பேசா மொழி புரியாமல்
ஆனால் 
அதன் வழி தெரிந்து
எதோ  ஒரு கிறக்கம்
தலைகுள்ள  எறங்கும் 


ஐயோ இதென்ன
உனக்கு பிடிச்சிருக்கா கிறுக்கு
போதை எத்துற எனக்கு
                                                                      -- (மெல்ல)
மெய்யோடு மெய்யுரசும்

ஓசையற்ற ஓசை -- நம்
அறையெங்கும்
நிறை கொண்ட
அரவமற்ற அரவம்

கேட்காததெல்லாம்
நீ கேட்டு
என் வெட்கமெல்லாம்
தீர்ந்து போச்சு --நீ
மீண்டும் மீண்டும்
என்னுள் எதோ
தேட தேட -- அதுவே
கூடி போச்சு
                                                                    -- (மெல்ல)
என் மெய் முழுதும் உன் உயிரல்ல
ஆய்த எழுத்தின் அர்ச்சனை
உயிர் மட்டும் உடலை விட்டு
போனதென்ன பிரச்சனை

கைகாரி உன்னிடம்
களவியலும் கற்றேன்
கைமாறாய் கரைஞ்சு போனேன் -- உன்
கையளவு காமத்திலே
                                                                 --- பூங்குழலி