பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

தினா

தினா தி கிரேட் 

இந்த 15 ஆண்டுகள்
உன்னை நினைக்கவில்லை
நாங்கள்

ஆனால்
இனி
ஒரு நாளும்
உன்னை
மறக்க முடியாத
காயம் ஒன்று
விட்டு சென்றாயே
நண்பா

சென்னை கெத்து  -- நீ
தன்னம்பிக்கை -- பொருள் நீ
சிட்டி ஸ்டைல்  -- அது
கலைய்த்தல் -- மன்னன்
ஒரு
ஆசாத்திய கல்லூரி
மாணவனாய்
1995 முதல்
 2000 வரை
சட்ட கல்லூரியின்
மலரும் நினைவுகளில்
என்றென்றும் நீ
தோழா

எப்போதும்
உன்னை சுற்றி
பெண் தோழிகள்
இல்லை
எங்களை சுற்றி
நீ
ஒரு போதும்
தவறாய்
பார்த்தாதாய்
பேசியதாய்
நினைவில்லை
எனக்கு

தோழிகள் அனைவரும்
வேற்றுமை இன்றி
கலாயித்ததில் இருந்து
சங்கட படமால்
சத்தாஇதத்தில்  வரை

சண்டை போடவேண்டும்
என்று நினைத்தாலும்
மாற்றி விடுவா யாடா
தினா

அரவணைக்கும்
உள்ளம் உனக்கு
தோழமைக்கு
தோள் கொடுக்கும்
நெஞ்சம் உனது

தினா தி கிரேட் 
ஜீன் தினா 
நாங்கள் கொடுத்த
பட்டப்பெயர்கள்

இன்று உனக்கு
மாலைபோட்டு
மரியாதை செய்து
ஊர்வலம் நடத்தி
வழியனுப்பி
வைத்தோம்

முகநூளில்
வாட்சாபில்
குறுந்தகவலில்,
அலைபேசியில்
நேரில் பார்த்தும் கூட
இந்த வாரம்
நாங்கள்
அனேகமாக
வருந்தி பேசியது
உன் பிரிவை
பற்றி தான்

ஆம்
உனக்கு
இன்று
மாலை போட்டோம்
வாழ்வில் வெற்றி
பெற்றாய் என்றோ
சாதித்தாய் என்றோ
அல்ல
வாழ்ந்து இர ண்டு மூன்று
குழந்தைக்கு தந்தை ஆனாய் என்றோ
அல்ல
கட்டிய மனைவியோடு
புதுக்குடி போனாய்
 என்றோ அல்ல

வாழ வேண்டிய வயதில்
வதங்கி போனாயே
நண்பா
உயிர் பிரிந்து
உடல் வாடி

கல்லூரி காலத்திற்கு பின்
நட்பை ஒரு
பாலமாய் ஆக்கி
சோர்ந்த நண்பர்களையோ
தோல்வியுற்ற
தோழர்களையோ
அடிக்கடி சந்தித்து
அறுதல் கூறவும்
இல்லை
தவறும் செய்யும் போது
வள்ளுவனின்
வாக்குக்கு ஏற்ப
இடித்துரைக்கவும்
மறந்து போனவர்கள்
நாங்கள்


இன்று
உனக்கு
இறுதி
ஊர்வலம்
மாலை போட்டு
கண்ணீர் தான்
விட முடிகிறது


காலத்தின்
கட்டாயத்தில்
கரைந்து
போன
நாங்கள்
தனித்து போன
உன்னை ப்பற்றி
நினைக்க மறந்தோம்

நீயோ
தன்னம்பிக்கையை
தூக்கி போட்டு
உனக்குள்ள
நீயே
புதைந்து
போனாய்

 கடைசி வரை
என்ன நினைத்தாய்
எதை தொலைத்தாய்
எவருக்கும் தெரியாதே

காலம் மிகவும்
சூட்சமம்னது
வாழ்க்கை மிகவும்
வேடிக்கையானது

மரணம்  நிச்சயம் உண்டு
அறிவோம் தோழா
அனால் வாழ்ந்து பார்க்காமல்
மாண்டு போவது கொடுமை
தினா

இனி
ஒருவன்
எங்களில்
இருந்து
இயற்கைக்கு
மாறாய்
பிரிந்து போக
மாட்டான்
என்று
உன்
ஆத்மாவின்
பெயரில்
உறுதி
எடுத்தோம்

நீ
அமைதி
கொள்வாயோ
தோழா



1995 - 2000
சென்னை சட்டக்கலூரி
தோழர்கள்