பக்கங்கள்

புதன், 21 நவம்பர், 2012

சாதி சாயம்









மருத்துவர் ஐயா

மன்றாடி அன்று பெற்றது
-- (மி.பி வ)

மார்தட்டி இன்றுசொல்லுவது
--(மி.உ.சா)

ஒதுக்கீட்டில் வாய்ப்பும்
ஆட்சியில் பங்கும்
ஒடுக்கப்பட்டவன் இல்லாத
பூமியில்பெற்றுகொள்ளுங்கள்

ஆம்
தேசம் முழுதும்
தாழ்த்தபட்டவனின் வியர்வையும்
வோட்டு வங்கியும் தான் அதிகம்

பெய்யும் மழை
வீசும் காற்று
சுட்டு விடும் பகலவன்
நிலத்தை தாங்கும் ஆழி
எதுவும்
தலித்துக்கும் தாழ்ந்தவனுக்கும்
இல்லாதவாறு செய்து விடுங்கள்
நீங்கள்
உயர்ந்த சாதி என
உலகம் ஒப்பு கொள்ளும்

இல்லையெனில்
தலித்துகளும் தாழ்ந்தவனும்
இல்லாத மண்ணில்
உங்கள் கூட்டத்தோடு
குடியேறுங்கள்

அய்யகோ
அப்போது
மனிதம் கடந்த
வானவ குலத்துவராவீர்களே
என் செய்வது

மரணமில்லா  வீட்டில்
கடுகு தேடிய
சுஜதைக்கு அன்று ஒரு
கௌதமன் இருந்தான்
தீடடில்லா வீடில்லை
என்றுணர்த்த

மருத்துவம் கற்ற உனக்கு
பகத்ததறிவு உணர்த்த
அண்ணல் விட்டு சென்ற
அடையாளங்களும்,
பெரியார் சொல்லி சென்ற
வெங்காயமும் --
போதாதா

காதல் கூடாது என்றீரே
மனிதம்  வாழாது கொள்வீரோ

ஆம்
கலப்பு சாதியில்லா உலகம்
அப்போதல்ல இப்போதல்ல
எப்போதும் இல்லை


அண்ணல் சட்டம் கற்றாலும்
அவர் இயற்றிய சாசனம்
இந்நாட்டவன்
அனைவருக்குமானது

அதுபோல்

நீங்கள் கற்ற மருத்துவம்
பல்லன் பறையன்
பிராமணன் சத்ரியன்
ஏன் உங்கள் சூத்திர
சாதியையும் -- காப்பாற்ற

இல்லை அது
வன்னியனை காப்பாற்றும்
மற்றவ (தமிழ)னை வேரறுக்கும்
என்றால்
நாளை உன்பெயர்
வன்னிய தெருக்களில் மட்டும்
தமிழக வரலாற்றில் அல்ல
                         



----------