பக்கங்கள்

வியாழன், 20 மார்ச், 2014

நவீன ஏகலைவர்கள்


நவீன ஏகலைவர்கள்


அர்ஜுனர்களுக்கு கிடைத்த
 ஆசாரியர்களை விட
 ஏகலைவர்களின்
 துரோண(க)ர்களே
 இங்கு அதிகம்

துரோணர் கூட
கேட்டது கட்டை விரலை

எங்கள் குருமார்கள்

உயிரை
நன்றிக்கு
காணிக்கையாக்க
காத்திருக்கும்

எங்களிடம் கேட்காமல்
எடுத்து கொள்ளுவது
தன்மானம் என்னும்
தட்சணையை


                        ... பூங்குழலி