ஆதவனற்ற அண்டம்
வளியற்ற மண்டலம்
அலையற்ற கடல்
திசையற்ற நாவாய்
நிலவற்ற இரவு
குளிரற்ற காற்று
காரமில்லா கவுச்சி
உப்பில்லா பண்டம்
உயிரற்ற உடல்
உணர்வற்ற உயிர்
இதுபோல் தான்
காமமற்ற காதல்
...பூங்குழலி
ப்ரியாமான பிரியா
அறிவே உன் ஆற்றல்
அன்பு உனக்கு
அருஞ்சொற்பொருள்
அழகு என்பதும்
உனக்கு
புனைபெயர்
தனிமை உன் வலிமை
வெற்றி என்றும்
உன் குறிக்கோள்
உலகம் உன் சமுகம்
வானமே உன் எல்லை
நட்பு என்பது உன்
வளையம்
அன்பே
வசபடுமா எங்கள் பெயரும்
உன்னிடம்
.... பூங்குழலி