கோடை முடிஞ்சும்
அனல் கொஞ்சமும்
குறையாத நேரம்
மாலை வேளைக்கூட
வெப்பம் தகிக்கும்
பொது
சில்லுனு சிலுத்து சின்ன காற்று ஒன்று
தோன்றி
மெல்ல பின் மாறி
ஒரு சீற்றமாய்
ஓடி பின்
சட்டென்று
குளிரெடுத்து
வீசுது
மழைக்காத்து
அந்த
குளிருக்கு
சிலிர்க்கும்
முன்
சின்ன சின்ன
முகிலுடைத்து
சாரல் மழை
சற்று நேரம் வீசி
திசையெங்கும் தூவி
பெருமழையாய்
கொட்டி தீர்க்கும்
பேரழகை
எட்டிப்பார்க்கும்
என்னுள்
சின்ன நம்பிக்கை
இந்த ஆண்டு
நீர் நிலைகள் நிறையும்
நிலத்தடி நீராதாரம் உயரும்
குடிநீருக்கு
நீண்ட தூரம்
எம் மக்கள்
அலைய வேண்டாம்
கோடி கோடி
நன்றிகள்
மண்ணினைத்த
மழைக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக