பக்கங்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2017

பேரறிவாளன்

pika: சின்னஞ்சிறு பருவம் 
கடந்த
இளைஞன் 
நீ அப்போது 
தான் --- 
இளமை உன் வாழ்வில் 
எட்டிப்பார்க்க
எத்தனிக்கும்
போது
பருவம் மாறி 
இந்த
உலகம் 
புரியும் முன் 
காரிருள் 
ஒன்று
உன்னை
சூழ்ந்து
இளமைக்காலத்தை
இருண்டக்காலமாய்
மாற்றியது
உனக்கு மட்டுமல்ல
இந்த
இனத்திற்கு 
வந்த
ஊழ்வினையோ

உன்னை சுற்றியும் அடர்ந்த இருள் 
உரக்க நீ கத்தியும் 
கேட்காத குரல்
கண்கள் சுழற்றினால்
கருமை நிறம் 
தாண்டி ஒன்றும் 
தெரியவில்லை 
கைகள் இரண்டும் 
திசையெங்கும் 
சுழற்றி சுழற்றி
காற்றை தவிர 
ஒன்றும் 
தட்டுபடவில்லை 
காலத்தை தவிர 
கண்களுக்கு 
ஒன்றும்
புலப்படவில்லை 
காலமும்
அது
எப்போதும்
இதுதாண்
இறந்த காலமா
அல்ல
எதிர்காலமா
புரியாத புதிராக
இருக்கும்
நிகழ்காலம்

பல ஒளியாண்டுகள் 
கடந்த
அயாசை
சோர்ந்து 
விழுந்து
கிடந்த 
நிலை 

காரிருள் காட்டுக்கோட்டை
யில்
கடும் வெப்பம் தரும் வேனிற்காலம் 
நிலெம்மல்லாம வெள்ளமாய்
நிரம்பிய 
மழைக்காலம்
பனி உறைந்த 
குளிர்காலம்

இன்னும் பல 
பல இயற்கை மாற்றம் 
எல்லாம் ஒன்றாய்
இருந்திருக்கும் 
உனக்கு 
ஆம் 
அந்த 
இருள்
கடந்து 
ஒளி ஊடுருவும் 
வரை 
உன் உடல்
உயிர்
மண்டலம்
காணும் 
வரை 

அதோ சிறு
துளை ஒன்று 
முளைத்திருக்கிறது 
நீண்ட 
கால 
அழுத்தமா
இறையின் 
அருளா
காலத்தின்
கட்டாயமா
கருணையா

அடர்ந்த இருட்டுக்குள்
ஊடுருவும் 
வெளிச்சக்கீற்று 
உன்
மூச்சுக்குழாய் 
உயிர்வளியை
முழுமையாய் 
சுவாசிக்கும் 
தருணமிது

இது ஒரு மாபெரும் தேர்த்திருவிழாவுக்கான 
ஒத்திகை
அல்ல

ஒரு
மனிதன் 
இழந்த
இளமை
பெருமை
சம உரிமை
ஒரு 
எளிய
வாழ்க்கை 

மீளப்பெறும் 
அற்பத
அறிவு

இது
ஒரு
பேரறிவாளன் 
தாய்க்கு 
எளிய
மகனாய்
மீண்டு
வரும் 
அற்புதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக