பக்கங்கள்

திங்கள், 18 செப்டம்பர், 2017

ponamasa kavalai

சுவாசிக்க கொடுக்க
காற்று இல்லை என்
பிஞ்சுகளுக்கு

வளர்த்தெடுக்க
நீரில்லை எங்கள்
பயிர்களுக்கு

--

கடந்த
திங்களிறுதியில்
வந்த கவலை

வரும் திங்கள்
முதல் வாரம்
வாடகை
அப்புறம்
அரிசி பருப்பு
மளிகை செலவு

அடுத்த வாரங்களில்
தொலைபேசி
தொலைக்காட்சி
பால், காய்கறி
பள்ளி மற்றும்
பிற கட்டணம்

இன்னும்
மருத்துவம்
கடன்
வட்டி
சீட்டு என
பல சிலவு

வாரம் வாரம்
பிரித்து
கொடுத்து

நிம்மதி
பெருமூச்சு
விடும்
நேரம்

சமையல்
எரிவாயு
தீர்ந்து
நிற்கும்

இல்லை
மாறாக
வண்டி காப்பீடு
முடிந்திருக்கும்

அதுவும்
இல்லையா
விடாது
கருப்பு
கதைபோல

பொறுப்பாய்
வந்திருக்கும்
அழைப்பிதழ்கள்

இவ்வளவு
பஞ்சாயத்திலும்
மனம் அசராமல்
சில
வீண் செலவு

ஒரு வழியாய்
அந்த திங்கள்
கடைசி
வந்து சேர

இன்னும்
தீரவில்லை
போன மாச
கவலை

................


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக